சென்னை வருகை தந்த இந்திய வீரர்கள்: அதிரடி ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
By : Bharathi Latha
சென்னையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று இரண்டு அணிகளும் சமநிலையில் இருக்கிறது. தொடர்ந்து யாருக்கு இந்த இடம் என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 11:30 மணியளவில் நடக்கிறது.
போட்டிக்காக சென்னை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட டிக்கெட்கள் அனைத்தும் தற்போது விற்று தீர்ந்து இருக்கிறது. ஆன்லைனில் மட்டுமல்லாது நேரடியாகவும் டிக்கெட் விற்பனைக்காக ரசிகர்கள் மும்ரமாக காத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் இன்று தொடங்கும் இந்த ஆட்டத்தை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி விளையாடுவதற்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமான மூலமாக சென்னை வந்து இருக்கிறார்கள்.
வெவ்வேறு நட்சத்திர ஓட்டல்களில் இரண்டு அணி வீரர்களும் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாட்டு எதில் ஏழு வெற்றியும், ஐந்து தோல்வியும் கண்டு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஐந்து ஆட்டத்தில் நான்கில் வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News