இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம்: அரையிறுதி ஆட்டத்தில் விளையாடுவாரா?
பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாக்கு பந்து தாக்கி காயம் ஏற்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் சூப்பர் 12 சுற்று முடிவில் குரூப் 1 முதல் 2 இடங்களை பிடித்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கின்றது. இன்று நடக்க உள்ள முதலாவது அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மோதிக்கொள்ள இருக்கிறது.
நேற்று பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வியாழக்கிழமை நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணியினர் மைதானத்தில் நேற்று பந்தை உபகரணத்துடன் உதவியுடன் இருந்து பயிற்சி அளிக்கும் நிபுணர் எஸ்.ரகு கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு வந்து எரிய முயற்சித்தார். அதை புல்லட் ஷாட் ஆக அடிக்கும்போது,தோல்வி கண்ட ரோஹித் சர்மாவின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் வலிகள் தொடுத்த அவர் உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு காணப்பட்டது. ரோகித் சர்மாவிற்கு காயமடைந்த இடத்தில் மற்ற வீரர்கள் மருந்து கொடுத்தார்கள். சிறிது ஓய்வு நேரத்திற்கு பிறகு ரோகித் சர்மா மீண்டு பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், பந்தை தாக்கிய பிறகு மீண்டும் பயிற்சி ஈடுபட்ட ரோகித் சர்மா அதிக முக்கியத்துவம் உணரவில்லை. ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டிய தேவையில்லை. இன்னும் ஒரு நாள் இடைவெளி இருக்கிறது. காயத்தின் தன்மை கவலைப்படும் வகையில் இல்லை. அவர் இங்கிலாந்துக்கு எதிராக அரை இறுதியில் ஆடுவார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News