Kathir News
Begin typing your search above and press return to search.

விராட் கோலி இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன்: இர்பான் பதான் பாராட்டு!

விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று இர்பான் பதான் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விராட் கோலி இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன்: இர்பான் பதான் பாராட்டு!

ThangaveluBy : Thangavelu

  |  7 Dec 2021 7:47 AM GMT

விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று இர்பான் பதான் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 10 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதனால் மீண்டும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. இந்த போட்டியில் வீரர்கள் தேர்வு, பந்துவீச்சில் சில மாற்றங்கள் என்று கேப்டன் விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறுகையில், நான் ஏற்கனவே கூறியது போன்று விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன் ஆவார். அவர் 59.09 என்ற வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The Economics Times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News