ஆசிய தடகள போட்டி.. இந்தியாவிற்கு கிடைத்த இரண்டு தங்கப் பதக்கங்கள்...
By : Bharathi Latha
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு நேற்று மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக குண்டு எரிதல் மற்றும் 3000 மீட்டர் தீபம் சேஸ் ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் இந்திய வீரர்கள் அசத்தி இருக்கிறார்கள். 24வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது தாய்லாந்து தலைநகரான பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான நேற்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் அபாரமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் தன்னுடைய இரண்டாவது முயற்சியின் போது 20 புள்ளி 23 மீட்டர் தூரம் குண்டை எரிந்து சாதனை படைத்து இருக்கிறார்.அத்துடன் அவர் இடுப்பின் கீழ் பகுதியில் உள்ள ஏற்பட்ட வலியின் காரணமாக காலில் நொண்டிய படிதான் போட்டியில் இருந்தால், அவர் விலகினால் அதற்கு மேல் அவரால் தொடர முடியவில்லை. இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடி அவருடைய இலக்கு எட்டி இருந்தது. அவர் தங்கப் பதக்கத்தை வெல்லப் போதுமானதாக அமைந்தது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 28 வயதான இந்திய வீராங்கனை 9 நிமிடம் 38.76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தற்போது தங்கப் பதக்கத்தை தட்டி சென்று இருக்கிறார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான இளம் வீராங்கனை ஷயலி சிங் ஆறு புள்ளி ஐந்து நான்கு மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தையும் வென்று இருக்கிறார்.
Input & Image courtesy: News