ஆஸ்திரேலியா எதிரான டி-20 போட்டி தொடரை 2-0 என்று வென்ற இந்திய அணி.!
ஆஸ்திரேலியா எதிரான டி-20 போட்டி தொடரை 2-0 என்று வென்ற இந்திய அணி.!

By : Pravin kumar
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் பின்ச், ஆகர், ஸ்டார்க் என முக்கிய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடாத நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு மெத்திவ் வேட் கேப்டனாக இந்த போட்டியில் வழிநடத்தினார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் 58 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டோய்னிஸ் 16* ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 30 ரன்களும், ஷிகர் தவான் 52 ரன்களும் எடுத்து கொடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களும், விராட் கோஹ்லி 40 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
முன்வரிசையில் களமிறங்கிய வீரர்கள் ஓரளவிற்கு ரன் எடுத்து கொடுத்திருந்தாலும், யாரும் அதிரடியாக விளையாடாததால் கடைசி ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. வெற்றியை தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர் பறக்கவிட்டு இந்திய அணிக்கு வெற்றியும் பெற்று கொடுத்துள்ளார்.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களுடனும், ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றியின் மூலம் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
