இரண்டாவது சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
இரண்டாவது சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
By : Pravin kumar
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுக்மன் கில் இருவரும் களம் இறங்கினர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ரோஹித் சர்மா 161 ரன்கள் அடிக்க இந்திய அணி 329 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் வீழ்ந்தனர். 134 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 195 ரன்கள் பின்தங்கியது. பின்னர் விளையாடிய இந்தியா அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப அஸ்வின் நிலைத்து விளையாடி சதம் வீளாசினார். இது இந்திய அணிக்கு வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணிக்கு 481 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி வழக்கம் போல் இந்திய அணியின் சுழல் பந்தில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது. 164 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டைகளையும் இழந்தது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.