வாய்ப்பு வழங்கினால் சாதிப்பேன்.. கிரிக்கெட் வீரர் அஸ்வின்.!
இந்திய அணியின் முன்னணி வீரராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளார். இவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச விளையாட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 78 டெஸ்டில் விளையாடியுள்ளார்.
By : Thangavelu

இவர் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் அவர் இந்த போட்டிகளில் விளையாடவில்லை.
மேலும், டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று முத்திரை குத்தப்பட்டு தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார். இதனிடையே பேப்டன் வீராட் கோலி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்று அளித்தார். அப்போது அவர் பேசும்போது: அஸ்வின் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் விளையாட்டுக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. தற்போது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி வருகிறார் என பேசினார்.
இந்நிலையில், வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் விளையாட்டில் சாதிப்பேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.