20 ஓவர் உலகக் கோப்பை வெல்ல இந்தியா இதை செய்ய வேண்டியது அவசியம் - முன்னாள் பயிற்சியாளர்?
20 ஓவர் உலகக் கோப்பை வெல்வதற்கு பில்டிங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார்.
By : Bharathi Latha
கடந்த ஆறு மற்றும் ஏழு ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்திருக்கும் ரவி சாஸ்திரி தான் தற்பொழுது இந்தியா சிறப்பாக செயல்படுவதற்கு இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை கூறியிருக்கிறார். இதைப் பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியின்போது, பயிற்சியாளராக இருந்தேன். இப்பொழுது வெளியில் இருந்து இந்திய அணியின் திட்டமிடல் செயல்பாடுகளை கவனிக்கிறேன். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி முன்பு எப்போதும் இல்லாத மிகச்சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டு இருப்பதாக நினைக்கிறேன்.
நான்காவது முறை சூரியகுமார், ஐந்தாவது நிலையில் ஹர்திக், ஆறாவது நிலையாக ரிஷப் பண்ட் ஆகியோர் களம் இறங்குவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஏனெனில் பின் வரிசை பலமாக இருப்பது டாப் வரிசை பேட்மேன்களின் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிகரமாக இருக்கும். இந்திய அணியில் உள்ள ஒரே குறைபாடு பில்டிங் தான். இந்த பகுதியில் உள்ள பலவீனங்களை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பில்டிங்கில் கடும் முயற்சி எடுக்க வேண்டும். உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இருந்து உயரிய பில்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும் அருமையான ஃபீல்டிங்கின் மூலம் 15 -20 ரன்கள் தடுக்கும் பொழுது, அது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். இல்லையெனில் ஒவ்வொரு முறையும் நீங்கள் 15 20 ரன்கள் கூடுதலாக எடுக்க வேண்டியது இருக்கும். சமீபத்தில் நடந்த ஆண்கள் ஆசிரியர் கோப்பை கிரிக்கெட் இலங்கையின் பில்டிங் எப்படி இருந்தது? என்பதை பாருங்கள். பாகிஸ்தானுக்கு எதிரான நேரடியான இந்த ஆட்டத்தில் சூப்பரான பில்டிங்கின் மூலமாகவே கோப்பையை கைப்பற்றியது. எனது கணிப்பு படி உலக கோப்பை போட்டியின் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்று அவர் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News