Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிர பயிற்சியில் இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தும் அளவிற்கு சிறப்பான திட்டம் தயார்?

தீவிர பயிற்சியில் இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தும் அளவிற்கு சிறப்பான திட்டம் தயார்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jun 2023 3:49 AM GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்விதான் அடைந்தது. குறிப்பாக இந்த ஒரு விளையாட்டின் போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தங்களுடைய முழுவதுமான திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள். எந்த ஒரு இடைவழியும் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் பயணம் மேற்கொண்டு அங்கு விளையாடி இருக்கின்ற ஒரு காரணத்தினால் தான் அவர்கள் சரியாக விளையாட முடியவில்லை. அதற்கான அவர்கள் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.


அதுமட்டுமில்லாத பல்வேறு தரப்புகளில் இருந்து இந்திய அணி முன்கூட்டியே இங்கிலாந்து வந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி இருந்தால் இந்தியா கோப்பையை வென்று இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த ஒரு சர்ச்சை காரணமாக ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க கூடாத அவரை நீக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் எழுந்து வந்தது. இதனால் ரோகித் சர்மாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே சில வீரர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்கும் என்றும் இல்லையெனில் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே கடந்த முறை ஏற்பட்ட தவறில் இருந்து தற்போது பாடம் கற்றுக் கொண்ட இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் உடன் மாதிரி விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்பாடு செய்ய கோரிக்கைகளை முன்வைத்து இருக்கிறது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி முன்கூட்டியே அங்கு சென்று பயிற்சிகளையும் தீவிரமாகவும் மேற்கொள்ள இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News