பயிற்சி ஆட்டத்தில் பாதியிலேயே வெளியேறிய மந்தனா!
நியூசிலாந்தில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு பெறுகிறது.
By : Thangavelu
நியூசிலாந்தில் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு பெறுகிறது. இதற்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி தென்ஆப்பிரிக்காவுடன், இந்திய அணி ரங்கியாரா நகரத்தில் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 244 ரன்களை குவித்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 242 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.
முன்னரே இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவை 23 பந்துகளுக்கு 12 ரன்களை எடுத்திருந்தார். அப்போது தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து, மந்தனாவின் ஹெல்மெட் மீது தாக்கியது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நலமாக உள்ளார் என கூறினர். இருந்தபோதிலும் சற்று தடுமாற்றமாகவே இருந்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்தார். இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கையாக அவர் பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் இந்திய வீராங்கனைகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Source: Maalaimalar
Image Courtesy: Sportskeeda