கோப்பையை வெல்வது நிச்சயம்.. யார் அறிவுரையும் தேவையில்லை.. கேப்டன் ரோகித் சர்மா!
கோப்பையை வெல்வது நிச்சயம், யார் அறிவரையும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.
By : Bharathi Latha
கடந்த காலங்களில் ஐசிசி நடத்திய போட்டிகளில் 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு போட்டிகளிலும் கோப்பையை வெல்லவில்லை. குறிப்பாக இறுதி ஆட்டம் வரை சென்று இருக்கும், ஆனால் எந்த ஒரு கோப்பையையும் அவர்கள் வெல்லவில்லை என்பது பலருடைய மனதில் கேள்வியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இம்முறை கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் மும்மரமாக பயிற்சி எடுத்து களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா அணி வளம் வாழ்ந்த ஒரு அணியாக தான் இருந்து வருகிறது. அதுவும் அவர்களுடைய சொந்த நாட்டில் இந்தியா வெல்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் நடக்காதது கிடையாது இந்தியா சற்று கடினமாக முயற்சி செய்தால் நிச்சயம் வென்று கோப்பையை வெல்லும். இது தொடர்பாக ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் அவர் கூறும் பொழுது, நான் மட்டுமல்ல எனக்கு முன்பு இருந்தவர்களும் சரி கேப்டனாக பொறுப்பேற்று இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி சென்று பல போட்டிகளையும் பல சாம்பியன் பட்டங்களையும் வெல்ல வேண்டும் என்பது எங்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும்.
நிறைய போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தான் நாங்கள் விளையாடி வருகிறோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தொடர்பாக நெருக்கடி கொடுக்காதீர்கள் நிச்சயம் கோப்பையை வெல்வோம் என கூறினார்.
Input & Image courtesy: News