244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.! மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டு வருமா இந்திய.!
244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.! மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டு வருமா இந்திய.!

By : Pravin kumar
இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெறு வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்து இருந்தனர்.ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த இரண்டு போட்டிகளை விட இந்த போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புகோவ்ஸ்கி (62) மற்றும் லாபுசாக்னே (91) ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர்.

கடந்த இரண்டு போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் இந்த மூன்றாவது போட்டியில் சதம் (131) விளாசி இருக்கிறார். இதையடுத்து இந்திய வீரர்கள் தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கினர். 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களை பெற்றிருந்தது. இதில் இளம் வீரர்கள் சுப்மன் கில் 50 ரன்கள் குவித்தார். இன்று மூன்றாவது நாளில் இந்திய அணி சார்பாக புஜாரா மற்றும் ரகானே ஆட்டதத்தை தொடங்கினர்.

சுப்மன் கில்லை தொடர்ந்து புஜாரா அரை சதம் விளாசினார்.அதன் பிறகு அனைத்து வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை இழந்தனர். இதில் ரஹானே 22, விகாரி 4, ரிஷப் பண்ட் 36, ஜடேஜா 10 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் பின்தங்கி உள்ளது.
