Kathir News
Begin typing your search above and press return to search.

நியூசிலாந்த் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் தெரியுமா!

முதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்த் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் யார் யார் பங்கேற்பார்கள் தெரியுமா!

ThangaveluBy : Thangavelu

  |  12 Nov 2021 9:51 AM GMT

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 20 ஓவர் போட்டிகள் நவம்பர் 17ம் தேதி தொடங்கி, நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 7 அன்று முடிவடைகிறது. 20 ஓவர் தொடரில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் விராட் கோலி, ஜடேஜா, புர்மா, ஷமி ஆகியோர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முதல் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரகானே தலைமையிலான இந்திய அணி வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல், ரகானே, கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா, கே.எஸ். பரத், ஜடேஜா, ஆர்.அஸ்வின், அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News