Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். போட்டி: லக்னோவுடன் மோதும் சி.எஸ்.கே.!

ஐ.பி.எல். போட்டி: லக்னோவுடன் மோதும் சி.எஸ்.கே.!

ThangaveluBy : Thangavelu

  |  31 March 2022 10:54 AM GMT

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றுவரை 6 ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்டவை தங்களின் முதல் ஆட்டங்களில் வெற்றியை பெற்றுள்ளது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் உள்ளிட்டவை முதல் ஆட்டங்களில் தோல்வியுற்றது.

இந்நிலையில், இன்று 7வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைத்தானத்தில் இன்று (மார்ச் 31) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்ஙக அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளது. இதில் எந்த அணி வெற்றிப்பெறும் என்ற ஆவல் இரண்டு அணியின் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Cric Tracker.Com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News