Kathir News
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் 2022: லக்னோ- பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் 2022: லக்னோ- பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ThangaveluBy : Thangavelu

  |  19 April 2022 2:10 PM GMT

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. 25வது நாளாவ இன்று (ஏப்ரல் 19) 7.30 மணிக்கு நடைபெறுகின்ற 31வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.

இந்த இரண்டு அணிகளும் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் லக்னோ அணி 3வது இடத்திலும், பெங்களூரு 4வது இடத்திலும் இருக்கிறது. இதனால் 5வது வெற்றியை பெறப்போவது யார் என்கின்ற ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதன்படி லக்னோ அணி, சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன்களிலும், டெல்லியை 6 விக்கெட்டிலும், மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பெங்களூரு அணி கொல்கத்தா 3 விக்கெட், ராஜஸ்தான் 4 விக்கெட், மும்பை 7 விக்கெட், டெல்லி 16 ரன் உள்ளிட்டவை தோற்கடித்தது. அதே போன்று பஞ்சாப்பிடம் 5 விக்கெட்டிலும், சென்னையிடம் 23 ரன்னிலும் தோற்றது. தற்போது இந்த இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் மிகவும் ஆவலுடன் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News