ஓய்வு குறித்து தானே முடிவை சொன்ன தோனி.. அப்படி என்ன சொன்னாருன்னு தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார் தல தோனி.
By : Bharathi Latha
ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே கேப்டன் தோனிக்கு தனி இடம் தான் இருக்கிறது. அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பல்வேறு செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு அவ்வப்பொழுது அதிர்ச்சியான தகவல்களை கொடுத்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தானே ஓய்வு பெறுவது குறித்து முடிவை கேப்டன் தோனி அவர்கள் அறிவித்து இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்பொழுதும் சென்னை அணி சிறப்பாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறது.
வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி இதுபற்றி கூறும் பொழுது, "தற்போது ஐபிஎல் மிகப்பெரிய தொடராக இருந்து வருகிறது. அணிகளின் எண்ணிக்கை எட்டில் இருந்து பத்தாக அதிகரித்து இருப்பதன் மூலம் போட்டி மிகவும் கடுமையாக தான் இருக்கிறது. எனவே இறுதிப் போட்டியை ஏற்றுவது என்பது எளிதான ஒரு விஷயம் அல்ல. இதில் நான் மற்றொரு இறுதிப் போட்டி என்று சாதாரணமாக சொல்ல மாட்டேன். இதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தன்னுடைய ஓய்வு முடிவை குறித்தும் கேப்டன் தோனி அவர்கள் கூறியிருக்கிறார்.
இந்த சீசனில் அவர் ஆடிய அனைத்து ஸ்டேடியங்களிலும் திரண்ட ரசிகர்கள் அவருக்கு பிரியா விடை கொடுப்பது போல் அமோகமாக ஆதரவுகளை அளித்திருந்தார்கள். இதுதான் உங்களுடைய கடைசி போட்டியா? என்பது தொடர்பான கேள்வியும் கேட்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் எட்டு மாதங்களில் நான் முடிவு எடுக்க இருப்பதாகவும் அதுவரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக குடும்பத்துடன் என்னால் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. ஐபிஎல்க்கு பிறகு தற்போது 8 மாதம் கழித்து இது குறித்து முடிவை அறிவிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar