அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதா... IPL கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட திடீர் பரப்பரப்பு!
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அக்சர் பட்டேலுக்கு வந்து வீச வாய்ப்பு அளிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
By : Bharathi Latha
IPL கிரிக்கெட் தொடரின் போது டெல்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் அணி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான மோதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் போது நடப்புச் சாம்பியன் குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை விரட்டியது. இரண்டாவது முறை வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதில் பேட் செய்த டெல்லி அணி எட்டு விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்துச் சென்றது. மேலும் குஜராத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. குஜராத் அணியின் வெற்றிக்கு வித்திட்டு தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக ஆட்டம் இழக்காமல் ஆடியிருந்தார்.
மேலும் இரண்டாவது அரை சதம் அடித்த சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்று இருக்கிறார். 36 ரன்கள் எடுத்த டெல்லி அணியின் சுழற் பந்து வீசும் இடது ஆள் ரவுண்டர் அக்சர் படேலுக்கு இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட பந்து வீச கேப்டன் டேவிட் வார்னர் வாய்ப்பு அளிக்காதது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஒரு பெரும் பிரச்சனை கிளம்புகிறது. குறிப்பாக கேப்டன் முடிவை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.
இது பற்றி கேப்டனிடம் கேட்கப்பட்ட பொழுது, ஏற்கனவே மைதானத்தில் இடது கை பேட்ஸ்மேன் இருவர்கள் களத்தில் இருக்கிறார்கள். எனவே அதன் காரணமாக மட்டும் தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை. இதுதான் உண்மை மற்றபடி வேறு எந்த தனிப்பட்ட காரணங்களும் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் வெற்றிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் மிகவும் உற்சாகமாக பேசுகிறார். குறிப்பாக 15 நாட்கள் தங்களுடைய அணியின் கடுமையான பயிற்சிகள் கிடைத்த இரண்டாவது வெற்றி என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News