ஒரு நாள் கூட ஓய்வின்றி கிரிக்கெட்டுக்காக உழைக்கும் வீரர்கள்.. என்ன ஒரு மாஸான செயல்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முடித்த கையுடன் இங்கிலாந்துக்கு சென்ற இந்திய வீரர்கள்.
By : Bharathi Latha
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்ததோடு, ஐந்து முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை தற்போது சிஎஸ்கே அணி மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறது. குஜராத்திற்கு எதிரான போட்டியில் கடந்த மூன்று முறை தோல்வி அடைந்த சென்னை அணி தற்போது வெற்றியடைந்து இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கிளப்புகிறது. இதன் காரணமாக இந்த ஒரு வெற்றி கொண்டாட்டம் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தன்னுடைய கோப்பையுடன் கோவில்களில் சென்று அதற்கு அர்ச்சனை செய்து வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தை பின்வைத்துவிட்டு, உடனடியாக இங்கிலாந்துக்கு விமானம் ஏறியுள்ளனர். தற்போது ஐபிஎல் கிரிக்கடர்கள் முடிவடைந்த பிறகு விராட் கோலி தலைமையிலான முதற்கட்டமாக இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எடுத்து இரண்டாவது ஆக நடைபெறும் சுற்றில் இந்திய கேப்டன் தலைமையில் இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாட இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு பின் குஜராத் மற்றும் சென்னை அணிகளில் விளையாடிய டெஸ்ட் அணி வீரர்கள் நேற்றிரவே இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். சென்னை அணியில் இருந்து ரஹானே, ஜடேஜா ஆகியோரும், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில், கேஎஸ் பரத், முகமது ஷமி ஆகியோரும் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். ஒருநாள் கூட ஓய்வின்றி இந்திய வீரர்கள் உடனடியாக பயணம் மேற்கொண்டுள்ளது அவர்களுக்கு கிரிக்கெட்டின் மீது எந்த அளவு பற்று இருக்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது.
Input & Image courtesy: News