சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: அலைமோதிய கிரிக்கெட் ரசிகைகளின் கூட்டம்!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் ஆட்டத்திற்கான டிக்கெட் வாங்குவதற்கு அலை மோதிய இளம் ரசிகைகளின் கூட்டம்.
By : Bharathi Latha
16 -வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகின்ற 31ஆம் தேதி அகமதாபாத்தில் 10 அணிகளுடன் தொடங்க இருக்கிறது. மேலும் இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏழாவது லீக் ஆட்டங்கள் நடக்க இருக்கிறது. ஏப்ரல் 3-ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக சென்னையில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பளவில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
டிக்கெட் வாங்குவதற்கு அதிகாலையில் இருந்து சேப்பாக்கத்தில் உள்ள கவுண்டர்களில் ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் இருந்தது. இதில் குறிப்பாக இளம் கிரிக்கெட் ரசிகைகள் அதிக அளவில் டிக்கெட் வாங்குவதற்கு வருகை புரிந்ததன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குறிப்பாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ரசிகைகள் டிக்கெட்களை வாங்கி சென்றார்கள். இதனுடைய விலை 1500, 2000, 2500 ஆகிய விலைகளின் கீழ் விற்கப்படுகிறது. விற்பனை கவுண்டர் ஓபன் செய்த ஒரு சில மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததாக கிரிக்கெட் சங்கத் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.
ஆஃப்லைனில் மட்டுமல்லாத ஆன்லைனிலும் கிரிக்கெட் பார்ப்பதற்கான டிக்கெட் படுஜூராக நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விற்பனை தொடங்கிய 15 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. குறிப்பாக சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் பெருமளவில் ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். குறிப்பாக டோனி உள்ளிட்ட ரசிகர்களின் பயிற்சிகளை உற்சாகமாக அவர்கள் கண்டுக்களித்தார்கள்.
Input & Image courtesy: News