Kathir News
Begin typing your search above and press return to search.

தல தோனி இடம் ஆட்டோகிராப் பெற்ற சீனியர் கிரிக்கெட் ஜாம்பவான்.. யாருன்னு தெரியுமா?

தல தோனி அவர்களிடம் கடைசி ஆட்டத்தின் போது ஜூனியரான சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் ஆட்டோகிராப் பெற்று இருக்கிறார்.

தல தோனி இடம் ஆட்டோகிராப் பெற்ற சீனியர் கிரிக்கெட் ஜாம்பவான்.. யாருன்னு தெரியுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 May 2023 4:37 AM GMT

IPL தொடரின் 61வது லீக் ஆட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பல்வேறு நகரங்களில் பல்வேறு அணிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொல்கத்தா மற்றும் சென்னை அடிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது சென்னை அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இருந்தாலும், இது தல தோனி அவர்களின் கடைசி ஆட்டம் என பல்வேறு ரசிகர்களும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கூட்டமாக ஆட்டத்தை பார்க்க வருகை தந்து இருந்தார்கள். ஆறு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இருக்கிறது.


விளையாட்டுகளில் வெற்றி, தோல்வி என்பது சரிசமமானது. அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த வகையில் சென்னை அணி தோல்வியை தழுவி இருந்தாலும் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு பார்க்காமல் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ரசிகராக்களாகவே இருந்து வருகிறது. இந்த ஒரு சமயத்தில் சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே அணியின் ரசிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் தான் தற்போது மகிழ்ச்சி ஏற்படத்திருக்கிறது.


குறிப்பாக அந்த புகைப்படத்தில் எம்.எஸ்.தோனி அவர்களின் சீனியரான சுனில் கவாஸ்கர் தன்னுடைய சட்டையில் எம்.எஸ்.தோனி அவர்களிடம் ஆட்டோகிராப் பெரும் புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் பெரும் பேச்சுப் பொருளாகி இருக்கிறது. ஏனென்றால் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என்று சாதனைகளை படைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில், ஒரு கேப்டனாக தோனி அனைவரையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News