IPL கிரிக்கெட்டில் இருந்து இந்த வீரர் விலகல்... அருமையான வாய்ப்பை கைவிட காரணம் என்ன?
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி இருக்கிறார்.
By : Bharathi Latha
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஹைதராபாத் சன்ரைஸ் அணியில் இடம் பிடித்த இரண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரம் அவர்கள் தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விலக்கி இருக்கிறார். குறிப்பாக இவருக்கு ஏற்பட்ட காயம் தான் இந்த போட்டியில் இருந்து அவர் விலகுவதற்கு மூல காரணமாக அமைந்திருப்பதாகவும் கருத்துக்கள் இருக்கிறது. இது பற்றி அவர் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரம் அவர்களுக்கு தசை பிடிப்பு காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் அவரால் தொடர முடியாது, அதன் காரணமாக அவர் அணியில் இருந்து விலகி இருக்கிறார்.
இதனை ஹைதராபாத் அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வாஷிங்டன் சுந்தரம் இந்த சீசனில் ஏழு ஆட்டங்களில் ஆடி 60 ரன்கள் எடுத்ததுடன் மூன்று விக்கட்டும். டெல்லி அணிக்கு எதிராக முந்தைய ஆட்டங்களில் அவர் மூன்று விக்கெட்கள் வீழ்த்தியதுடன் ஆட்டம் இழக்காமல் 24 ரன்கள் எடுத்து இருந்தால் என்பதும் குறிப்பிடத் தக்கது. குறிப்பாக பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டார்.
இவர் புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கு மேலும் வலு சேர்ப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி இருப்பது ஹைதராபாத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும் மூன்று வருடங்களாக இவர் காயத்தில் இருந்தார். அவர் 2021 ஆம் ஆண்டு கைவிரல் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு கட்ட ஆட்டம் மற்றும் 22 ஆம் ஆண்டு பந்து சுழற்ச்சும் கையில் விரல்களுக்கு இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்கு ஆட்டங்கள் தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News