Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே., கொல்கத்தா மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே., கொல்கத்தா மோதல்!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 4:33 AM GMT

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (மார்ச் 26) கோலாகலமாக தொடங்கஉள்ளது. அதன்படி 15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இரண்டு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறையில் அணிகள் மோதும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகிறது. தற்போது சிஎஸ்கே அணியில் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த முறை ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும் அவர் தொடர்ந்து அந்த அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News