கொரோனா தொற்றால் ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்: பி.சி.சி.ஐ., துணைத்தலைவர்.!
பாதுகாப்புகள் அதிகமாக இருந்தும் கொரோனா தொற்று ஐபிஎல் வீரர்களுக்கு பரவியுள்ளது, ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.
By : Thangavelu
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்துள்ளதால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள பல வீரர்களையும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்புகள் அதிகமாக இருந்தும் கொரோனா தொற்று ஐபிஎல் வீரர்களுக்கு பரவியுள்ளது, ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.
இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா, ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணியில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் உறுதி படுத்தியுள்ளது.