கேதர் ஜாதவை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் ஐபிஎல் அணிகள்!
கேதர் ஜாதவை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் ஐபிஎல் அணிகள்!
By : Pravin kumar
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
இதில் கேதார் ஜாதவ், முரளி விஜய், ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ஆரோன் பிஞ்ச், லசித் மலிங்கா, மேக்ஸ்வெல், என எதிர்பாராத முக்கிய வீரர்கள் பலர் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.வெளியேற்றப்பட்ட அனைத்து வீரர்களும் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் கலந்து கொள்வார்கள். வெளியேற்றப்பட்ட வீரர்களை மற்ற அணிகள் குறைந்த விலையில் தேர்வு செய்து கொள்வார்கள். இதனால் எந்த அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக 2018இல் 7.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். காயம் காரணமாக இவரால் சரியாக விளையாட முடியவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 8 போட்டிகளில் பங்கேற்று 62 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இவரின் இந்த மோசமான பார்மால் சென்னை அணியிலிருந்து கைவிடப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் அதிரடியாக ஆடி 5 போட்டிகளுக்கு 193 ரன்கள் எடுத்து அசத்தினார். அனுபவம் வாய்ந்த வீரரான இவர் மிடில் ஆர்டர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். இவரை எடுக்க காத்திருக்கும் மூன்று அணிகள். அவை சன் ரைசர்ஸ் ஐத்ராபாத், ராயல் பெங்களுரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் கேதர் ஜாதவை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் எனனில் மூன்று அணிகளுக்கும் அனுபவம் வாயந்த மீடில் ஆடர் பேட்மென் தேவை உள்ளது.