#IPL கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது இடத்தை பிடித்தது பஞ்சாப் அணி!
#IPL கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது இடத்தை பிடித்தது பஞ்சாப் அணி!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி ஷார்ஷாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி ஏற்கனவே நான்காவது இடத்தை நீண்ட போட்டிகளாக தக்கவைத்துள்ள நிலையில் நான்காவது இடத்திற்கு தான் தற்பொழுது போட்டி நிழவி வருகின்றது. இந்த இரு அணிகளும் தான் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் நித்திஷ் ராணா டக் அவுட் ஆக பின்னர் வந்த ராகுல் திரிபாதி 7 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக தொடர் விக்கெட்களை இழந்து வந்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் அதிரடியாக 25 பந்தில் 40 ரன்கள் அடித்தார். அவரும் அவுட் ஆக நிலைத்து விளையாடிய கில் 57 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 149/9 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்கம் சிறப்பாக அமைய கேப்டன் கே.எல்.ராகுல் 28 ரன்னில் அவுட் ஆக மற்றொரு தொடக்க வீரர் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் வீளாச மற்றொரு பக்கம் கிறிஸ் கெய்ல் அதிரடியாக அரைசதம் வீளாச பஞ்சாப் அணி எளிதில் வெற்றி இலக்கை எட்டியது.
