இனி சென்னை அணியை போன்று டெல்லி அணி அடுத்த ஐந்து ஆண்டுகள் வலுவாக இருக்கும்- இர்பான் பதான்.!
இனி சென்னை அணியை போன்று டெல்லி அணி அடுத்த ஐந்து ஆண்டுகள் வலுவாக இருக்கும்- இர்பான் பதான்.!

By : Pravin kumar
ஐபிஎல் 13வது லீக் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறாத நிலையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்தப்பட்டது. ரசிகர் இல்லாமல் ஐபிஎல் தொடரின் சூவாரசியம் இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் மும்பை அணியின் ஆதிக்கம் செலுத்தி தொடரை வென்றது.
மும்பை போன்று டெல்லி அணியும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. டெல்லி அணியை பொறுத்து வரையில் இளம் இந்திய வீரர்கள் மற்றும் நட்சத்திர இந்திய வீரர்களும் கொண்ட அணியாக உள்ளது. பந்து வீச்சாளரை பொறுத்தவரையில் வெளிநாட்டு வீரர்களும் உள்நாட்நாட்டு வீரர்களிலும் சிறந்த வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. அதுபோக பல இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டு தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த வருடம் இறுதிப் போட்டிக்கும் சென்றுவிட்டனர்
இந்த தொடரில் தோல்வியடைந்தது ஒருபுறமிருந்தாலும் இனி வரும் காலங்களில் டெல்லி அணி மிகச் சிறப்பாக விளையாடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசுகையில்…சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடக்கத்தில் இருந்ததைப்போல டெல்லி அணி அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு வலுவான ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருக்கும்.
பல வெற்றிகளைப் பெறும் என்று நம்புகிறேன். அந்த அணிக்கு ஒரு நல்ல பினிஷர் தேவை. ஹெட்மையர் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்ணிஸ் ஆகியோர் நன்றாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இணையாக இன்னொரு வீரர் தேவை அதேபோல் அந்த அணியில் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை இந்த இரண்டு வேலையும் செய்து விட்டால் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக மாறிவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அந்த அணியை அடித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்.
