எனது ஐபிஎல் அணியில் தோனி, கோலி, ரோஹித் லாம் இல்லை - இர்பான் பதானின் வெளிப்படையாக பதில்.!
எனது ஐபிஎல் அணியில் தோனி, கோலி, ரோஹித் லாம் இல்லை - இர்பான் பதானின் வெளிப்படையாக பதில்.!

By : Pravin kumar
ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று முடிவடைந்த 13வது சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பான பஙகளிப்பை அளித்த வீரர்களை கொண்டு தனது கனவு ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு டி-20 தொடர் இந்தியாவில் நடைபெறாதது இந்திய ரசிகர்களுக்கு வறுத்தத்தை கொடுத்தாலும் கொரோனா காலத்தில் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் வழக்கத்தை விட சற்று மந்தமாகவே தொடர் முழுவதும் காணப்பட்டது காரணம் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் ஐபிஎல் தொடர் என்பதால். இந்ந ஐபிஎல் தொடரில் எல்லாம் தலைகிழ நடைபெற்றது.
நட்சத்திர வீரர்கள் பெரிய அளவில் விளையாடாத நிலையில் இந்திய இளம் வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். இந்த ஐபிஎல் தொடரில் முழுமையாக சென்னை அணி தவறவிட்டது. சென்னை அணியால் ஐக்கிய அரபு அமிரகத்தின் சூழ்நிலையில் விளையாட முடியவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் பல இந்திய இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வீரர்களை கொண்டு சிறந்த ஐபிஎல் அணியைமுன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் இர்பான் பதான் அறிவித்துள்ளார். வீராட் கோலி மற்றும் ஆர்ச்சர் போன்ற வீரர்களை அணியில் இருந்து விலகி உள்ளார்.
கே.எல் ராகுல், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ், கீரன் பொலார்டு (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராகுல் திவாடியா, யுஸ்வேந்திர சாஹல், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி.
