Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா முன்னாள் கேப்டனை ஒப்பந்தம் செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா முன்னாள் கேப்டனை ஒப்பந்தம் செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  13 July 2022 2:16 PM GMT

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போது புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அணி கிரேக்க ஆஸ்திரேலியாவை சேர்ந்த அப்போஸ் டோலோஸ் கியானோவை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் கவாலா, எத்னிகோஸ் போன்ற பல கிரேக்க முதல்பிரிவு அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது அந்த அணி ஸ்பெயின் வீரர் விக்டர் மோங்கிலை ஒப்பந்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணிக்காக விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story