Kathir News
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் போட்டியில் லாரா சாதனையை முறியடித்த பும்ரா!

டெஸ்ட் போட்டியில் லாரா சாதனையை முறியடித்த பும்ரா!

ThangaveluBy : Thangavelu

  |  3 July 2022 11:02 AM GMT

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின்போது இந்தியா முதல் இன்னிங்கசில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா சதமடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா 83வது ஓவரில் 35 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 83 ஓவரில் இந்த வரலாற்று சாதனையை பும்ரா நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

மேலும், பிராட் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச அடுத்து வீசப்பட்ட பந்து வைடு முறையில் சுமார் 5 ரன்களை பெற்றுக் கொடுத்தது. நோ பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பும்ரா சிக்சர் விளாசி தள்ளினார். அதனை தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்ட பும்ரா, அடுத்த பந்துகள் அனைத்தும் ஹாட்ரிக் பவுண்டரி விளாசித்தள்ளினார். 5வது பந்தை மீண்டும் சிக்சர் அடித்த பும்ரா, கடைசி பந்திலும் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன்கள் விளாசப்பட்டது. பும்ரா மட்டுமே 29 ரன்களை குவித்தார். இதன் மூலம் லாராவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News