இங்கிலாந்து அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை மூன்றே ஓவர்களில் சுருட்டிய ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை மூன்றே ஓவர்களில் சுருட்டிய ஜோ ரூட்!
By : Pravin kumar
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி உலகின் மிக பெரிய மைதானமான அகமதாபாத் மொட்ரா மைதானத்தில் நடைபெற்ற வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் க்ரவுலி தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற க்ரவுலி மட்டுமே அரைசதம் வீளாசினார்.
இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழல்பந்து வீச்சில் சுருண்டது. மிகப்பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.இந்திய அணியின் சார்பில் அக்சர் படேல் 6 விக்கெட்களை வீழ்த்த அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்தியா அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி முதல் நாள் ஆட்டத்தில் அரைசதம் வீளாச புஜாரா டக் அவுட் ஆக வீராட் கோலி 27 ரன்களில் அவுட் ஆக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 99/3 ரன்கள் எடுத்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பந்து வீச்சில் வந்த கேப்டன் ஜோ ரூட் இந்திய அணி வீரர்களை திணற வைத்தார். ஆறு ஓவர்களை மட்டுமே வீசிய ரூட் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்கள் அடித்தது. 33 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது இந்திய அணி.