ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 5வது முறையாக இந்தியா சாம்பியன்!
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
By : Thangavelu
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் எதுவும் எடுக்காமலேயே திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் மட்டும் ரன்களை எடுத்து வந்த நிலையில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ரன்னில் அவுட்டாகினர். இதனை தொடர்ந்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் இணைந்தார். இரண்டு பேரும் நிதானமான ஆட்டத்தை கொண்டு சென்றனர். ஜேம்ஸ் ரீவ் 95 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டு இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.
இதன் பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் ரகுவன்ஷி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அவருடன் இணைந்த மற்றொரு தொடக்க வீரரான ஹர்னூர் சிங் 21 ரன்களில் விக்கெட் ஆனார். அவரை அடுத்து விளையாடிய ஷேக் ரஷீத் அரை சதம் எடுத்திருந்தார். கேப்டன் யாஷ் 17 ரன்களுடன் ஆட்டத்தை இழந்தார். இதனால் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் நிஷாந்த் 50 ரன்களுடன் ஆட்டத்தை இழக்காமல் நிதானமாக விளையாடினார். இதனால் இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த 4 முறை கோப்பையை வென்ற நிலையில் தற்போது 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: DNA India