Kathir News
Begin typing your search above and press return to search.

அஸ்வின் 500 விக்கெட் எடுக்க வேண்டும்: கபில்தேவின் புதிய ஆசை!

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியிலேயே அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். இதனால் டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் 432 என்கின்ற சாதனையை முறியடித்தார். இதுவரை 85 போட்டிகளில் 436 விக்கெட்டை எடுத்துள்ளார்.

அஸ்வின் 500 விக்கெட் எடுக்க வேண்டும்: கபில்தேவின் புதிய ஆசை!

ThangaveluBy : Thangavelu

  |  8 March 2022 10:59 AM GMT

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியிலேயே அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். இதனால் டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் 432 என்கின்ற சாதனையை முறியடித்தார். இதுவரை 85 போட்டிகளில் 436 விக்கெட்டை எடுத்துள்ளார்.

இந்நிலையில், தனது சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியை பொறுத்தவரையில் சில காலமாக அஸ்வினுக்கு வாய்ப்புகளை வழங்கவில்லை என தெரிகிறது. அப்படி இருந்தும் அவர் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மேலும், அஸ்வின் வியக்கத்தக்க வீரர், சிறந்த புத்திசாலித்தனமான பந்து வீச்சாளரும் ஆவார். வரும் காலங்களில் 500 விக்கெட் என்கின்ற இலக்கினை அவர் அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Wikipedia

Next Story