பிஎஸ்எல் தொடரின் இறுதி போட்டியில் காராச்சி மற்றும் லாகூர் அணிகள் இன்று பலப்பரிச்சை.!
பிஎஸ்எல் தொடரின் இறுதி போட்டியில் காராச்சி மற்றும் லாகூர் அணிகள் இன்று பலப்பரிச்சை.!

By : Pravin kumar
ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பாகிஸ்தானில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்ற பாகிஸ்தான் லீக் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குவதற்குள் கொரோனா தொற்று உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் மீண்டும் பிளே ஆப் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து கடந்த நவம்பர் 14 ம் தேதி முதல் குவாலிபையர் போட்டியை {நடத்தியது அந்த போட்டியில் காரச்சி கிங்ஸ் அணியும் முல்தான் சுல்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் காரச்சி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் சுல்தான் அணி குவாலிபையர் இரண்டாவது போட்டியில் மீண்டும் லாகூர் அணியுடன் மோதியது. லாகூர் அணி எலிமினேடர் போட்டியில் வென்று குவாலிபையர் இரண்டில் சுல்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள காரச்சி மைதானத்தில் பிஎஸ்எல் தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. சொந்த மைதனாத்தில் காரச்சி அணியும் லாகூர் அணியும் இன்று பலபரிச்சை நடத்த உள்ளனர். காரச்சி அணியில் பாபர் ஆஷாம் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர் காரச்சி அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
