Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்.!

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்.!

இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்.!

Pravin kumarBy : Pravin kumar

  |  18 Nov 2020 12:44 PM GMT

இந்திய அணியுடனான ஒருநாள், டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

கிரிக்கெட் உலகின் வல்லரசாக திகழும் இரு அணிகள் இடையேயான இந்த தொடர் 27ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாரண்டைனில் இருக்கும் வீரர்கள் ஜிம்களில் பயிற்சி எடுத்து வருகின்றனர், சிலர் மைதானங்களிலேயே பயிற்சி எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சட்சன் டி-20 தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் டி-20 இருந்து விலக காரணம் அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை பிறந்துள்ளதால் குழந்தை மற்றும் மனைவியும் சிறிது காலம் செலவழிக்க டி-20 தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஆண்ரோ டை மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஆரோன் பின்ச் (கேப்டன்), சியென் அபோட், அஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமிரான் க்ரீன், ஜோஸ் ஹசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஸ்சேன், கிளன் மேக்ஸ்வெல், டேனியல் சம்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரியூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News