Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய இந்திய வீரர்கள் விலகல்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய இந்திய வீரர்கள் விலகல்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய இந்திய வீரர்கள் விலகல்!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  13 Jan 2021 4:01 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் நான்காவது முக்கியமான 4வது போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே அதிகரித்துள்ளது. இந்த 4 ஆவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கு ஏற்படும் தொடர் காயம் அணி நிர்வாகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே இத்தொடர் துவங்கும்போதே இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து தொடரை ஆரம்பித்த பிறகு பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். குறிப்பாக முதல் போட்டிக்கு பின்னர் காயம் காரணமாக முகமது ஷமி வெளியேறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

அதனால் இந்திய அணியின் நிர்வாகம் உண்மையிலேயே வீரர்களை தேர்வு செய்வதில் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியின்போது ஜடேஜா, விஹரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் நான்காவது போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அதுமட்டுமின்றி அஸ்வின் மற்றும் பண்ட் ஆகியோரும் காயமடைந்தனர். ஆனாலும் அவர்கள் நான்காவது போட்டியில் விளையாடும் அளவிற்கு தகுதியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழப்பாக முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடிவயிற்றில் ஏற்பட்டுள்ள பிடிப்பு காரணமாக நான்காவது போட்டியில் தான் விளையாட போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News