Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு இடதுசாரிகளால் நேர்ந்த அவமானம் !

Chopra's historic Gold medal at the Tokyo Olympics threw the country into ecstasy. Celebrations were seen in different parts of the country, especially Haryana, the home state of gold medalist Neeraj Chopra.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு இடதுசாரிகளால் நேர்ந்த அவமானம் !
X

Olympic gold medalist Neeraj Chopra(Source: PTI)

MuruganandhamBy : Muruganandham

  |  8 Aug 2021 4:06 AM GMT

ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இந்த தருணத்தை சனிக்கிழமை மாலை இந்திய முழுக்க மக்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த பதக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தடகள ஒலிம்பிக்கில் 100 ஆண்டுகளில் ஒரு இந்தியர் பெறும் முதல் பதக்கம் ஆகும். கடைசி பதக்கம் 1920 இல் வாங்கப்பட்டிருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சோப்ராவின் பதக்கம் நாட்டை பரவசத்தில் ஆழ்த்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. மக்கள் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை வாழ்த்தி வரும் வேளையில், சிலர் அவரைப்பற்றி எதிர்வினையாற்றும் பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர்.

தங்களை இடது சாரி என்று வர்ணித்துக் கொள்ளும் இந்த நிறைய பேர், சோப்ராவை வாழ்த்தி அவரின் வெற்றியை கொண்டாட முடியவில்லை. அதற்கு சோப்ராவின் பழைய ட்வீட்டுகளே காரணம். 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில், நீரஜ் சோப்ரா பிரதமரை வாழ்த்தி பதிவிட்டு இருந்தார்.


வரலாற்று வெற்றி. எங்கள் பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தலைமையின் கீழ் எங்கள் நாடு புதிய உயரங்களை அடையட்டும் என்று சோப்ரா ட்வீட் செய்திருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் சோப்ரா தங்கப் பதக்கம் வென்ற பிறகு, அவரது பழைய ட்வீட்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கின. பிரதமருக்கு வாழ்த்து சொன்னதற்காக, ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரை தவறாக விமர்சிக்கும் அளவுக்கு இடதுசாரிகள் களமிறங்கிவிட்டனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News