DRAWவை நோக்கி நகர்கிறதா லார்ட்ஸ் டெஸ்ட் ?
The Lords Test.
By : G Pradeep
லண்டன்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர்.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூ 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் 5 ரன்னிலும், ரோஹித் சர்மா 21 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார். 55 ரன்களை எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.
அடுத்து இறங்கிய புஜாராவும், ரகானேவும் பொறுமையுடன் ஆடினர். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.
அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாரா 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரகானே அரை சதமடித்தார். அவர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 82 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 14 ரன்னும், இஷாந்த் சர்மா 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதுவரை இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், மொயின் அலி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.