Begin typing your search above and press return to search.
கால்பந்தாட்ட மைதானத்திற்கு மரடோனாவின் பெயர் சூட்டு.!
கால்பந்தாட்ட மைதானத்திற்கு மரடோனாவின் பெயர் சூட்டு.!

By : Kathir Webdesk
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் டீகோ மாரடோனா மாரடைப்பால் கடந்த நவம்பர் 25ம் தேதி அவரது 60 வயதில் காலமானார். அர்ஜென்டினாவுக்காக ஃபிபா கால்பந்தாட்ட உலக கோப்பையை வென்று கொடுத்தவர். நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரும் கூட.
இவர் கடந்த 1984 முதல் 1991 வரை இத்தாலியின் தொழில்முறை கால்பந்தாட்ட கிளப் அணியான நாபோலி அணிக்காக மரடோனா விளையாடியுள்ளார்.
அந்த அணி சீரி ஏ கோப்பையை வெல்வதற்கு பெரிதும் உதவி புரிந்தார். அவரின் பங்களிப்பை போற்றும் வகையில், நாபோலி கால்பந்து மைதானத்தின் பெயரை என அழைக்கப்படவுள்ளது.
இவருக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மீண்டும் கொரோனா தொற்று குறைந்து பழையபடி கால்பந்தாட்டம் நடைபெற வேண்டும் என்பது அனைத்து ரசிகர்களின் விருப்பமும் கூட.
Next Story
