Begin typing your search above and press return to search.
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் தோல்வி!
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (நவம்பர் 20) இரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரராக கருதப்படும் நோவக் ஜோகோவிச்சும், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவும் விளையாடினர்.

By :
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் (நவம்பர் 20) இரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 'நம்பர் ஒன்' வீரராக கருதப்படும் நோவக் ஜோகோவிச்சும், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவும் விளையாடினர்.
இந்த ஆட்டம் 2 மணி 29 நிமிடங்கள் நீடித்ததில் ஸ்வெரேவ் 76 (74), 45, 63 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தார். இதனால் கவுரவமிக்க இப்பட்டத்தை 6வது முறையாக வெற்றி பெற்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்வதற்கு காத்திருந்த ஜோகோவிச்சின் கனவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
Source: Daily Thanthi
Image Courtesy: ATP Tour
Next Story