தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!
தமிழக செஸ் வீரர் பிரக்னியா பிரக்ஞானந்தா, ஜெர்லின் அனிகா இளவேனில் உட்பட மூன்று தமிழகம் வீரருக்கு அர்ஜுனா விருது.
By : Bharathi Latha
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் உயிரிழல் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வழங்கி கௌரவத்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான விருதிற்கு தகுதியானவர்களின் பெயர்களை நீதிபதி தலைமையிலான கமிட்டி தேர்வு செய்தது விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதன் படி சுமார் 25 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு டேபிள் டென்னிஸ் வீரடான தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். டேபிள் டென்னிசில் இருந்து இரண்டாவது நபராக கேல் ரத்னா வரும் நபராக இவர் அறியப்படுகிறார்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, மற்றும் காது கேளாதருக்கான பேட்மிட்டனில் சாதிக்கும் ஜெர்லின் அனிகா துப்பாக்கி சுடும் போட்டியில், இளவேனில் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து மொத்தம் மூன்று பெயர் அர்ஜுனா விருதுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். இந்தியாவில் மொத்தமாக 25 நபருக்கு அர்ச்சனா விருது வழங்கப்பட இருக்கிறது. இவ்விருது வழங்கும் விழா வருகின்ற 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
Input & Image courtesy: Maalaimalar News