உலக கோப்பையில் பங்கேற்கும் இளம் வீராங்கனைகளுக்கு மிதாலிராஜ் அறிவுரை!
By : Thangavelu
12வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மார்ச் 6ம் தேதி மோத உள்ளது. இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலிராஜ் 6வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தற்போது இளம் வீராங்கனைகளை இந்திய அணியில் சேர்த்து பல்வேறு போட்டிகளில் சோதித்து பார்த்துள்ளோம். அதில் குறிப்பிட்டு சிலர் தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கி உள்ளோம்.
ஒரு கேப்டனாக யார், யார் பொருத்தமாக விளையாடுவார்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது. தற்போதைய இளம் வீராங்கனைகள் இதற்கு முன்னர் உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லை. இது அவர்களுக்கு ஒரு தொடக்கம் ஆகும். நான் சொல்கின்ற அறிவுரை இது மட்டும்தான். மிகப்பெரிய போட்டிகளில் உற்சாகமாக அனுபவித்து விளையாடுங்கள். எனவே அப்போதுதான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy: Times Now