Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன் லீக் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் மோகன் பகான் அணி வெற்றி!

11 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 8வது சீசன் கோவாவில் நேற்று (நவம்பர் 19) தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்புகளுக்காக ரசிகர்கள் இல்லாமல் இப்போட்டிகள் நடைபெற்றது.

இந்தியன் லீக் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் மோகன் பகான் அணி வெற்றி!

ThangaveluBy : Thangavelu

  |  20 Nov 2021 4:39 AM GMT

11 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 8வது சீசன் கோவாவில் நேற்று (நவம்பர் 19) தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்புகளுக்காக ரசிகர்கள் இல்லாமல் இப்போட்டிகள் நடைபெற்றது.

நேற்று (நவம்பர் 19) நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி (மேற்கு வங்காளம்) கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் விளையாடியது. இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி 42 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி அபாரமான முறையில் வெற்றி பெற்றது.

மேலும், மோகன் பகான் அணி தரப்பில் இருந்து ஹூகோ போமவுஸ் (2 மற்றும் 39வது நிமிடம்) ராய் கிருஷ்ணா (27வது நிமிடம்), லிஸ்டன் கோலாகோ (50வது நிமிடம்) கோல் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கேரள அணியில் சஹால் அப்துல் சமாத் (24வது நிமிடம்) ஜார்ஜ் பெரேரா டயாஸ் (69வது நிமிடம்) கோல் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Imaeg Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News