ரோஹித் சர்மாவை வீழ்த்துவதே எனது இலக்கு ஆஸ்திரேலியா வீரர் ஓபன் டாக்!
ரோஹித் சர்மாவை வீழ்த்துவதே எனது இலக்கு ஆஸ்திரேலியா வீரர் ஓபன் டாக்!

By : Pravin kumar

அதுமட்டுமின்றி இந்தியனின் இந்த கம்பேக் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் 1-1 என இந்த டெஸ்ட் தொடர் சமநிலையில் இருக்கிறது. 3ஆவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 7) சிட்னி மைதானத்தில் நடைபெற வருகிறது. இந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா மற்றும் நவதீப் சைனி புதிதாக இணைந்துள்ளனர். முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழந்து 166 ரன்கள் குவித்து இருக்கின்றனர். இதில் இந்திய இளம் வீரர்களான சிராஜ் மற்றும் சைனி தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் ரோகித் சர்மாவை வீழ்த்துவதே எனது குறிக்கோளாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய நாதன் லயன் “சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். ரோகித் சர்மாவை சமாளிப்பது பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நாங்களும் இது போன்ற சவால்களை தான் விரும்புகிறோம். இவர் இந்திய அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுக்கக் கூடியவர். இவரது விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் கிடையாது. சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு இருப்பதால் அவரது விக்கெட்டை எடுக்க நான் முயற்சிப்பேன். இதற்காக புதிய திட்டங்களுடன் களமிறங்க இருக்கிறேன்” இது நாதன் லயன் கூறியிருக்கிறார்.
