"என் ரோல் மாடல் சச்சின், சேவாக், தோனிலாம் இல்லை இவர் தான்!" - படிக்கல் பளிச்!
"என் ரோல் மாடல் சச்சின், சேவாக், தோனிலாம் இல்லை இவர் தான்!" - படிக்கல் பளிச்!

By : Pravin kumar
ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த ஆண்டு தொடக்க வீரராக விளையாடிவர் தேவ்தெத் படிக்கல். இவர் கர்நாடாகா மாநிலத்தை சேர்ந்தவர். ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாகலி டிராபி போன்ற முதல் நிலை கிரிக்கெட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கர்நாடாகா டி-20 லீக் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக களம் இறங்கினார்.
இந்தாண்டு முதன் முதலில் ஐ.பி.எல் தொடரில் களம் இறங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே அரைசதம் வீளாசி அசத்தினார். தொடர்ந்து இந்த ஐ.பி.எல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 15 போட்டிகளில் 473 ரன்கள் குவித்தார். இவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் இவரின் ஆட்டத்தை பார்த்தால் யுவராஜ் சிங் ஆட்டத்தை போன்று உள்ளது என ரசிகர்கள் கூறி வந்தனர்.
முன்னாள் வீரர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த நிலையில் தற்போழுது பேட்டி ஒன்றில் எனது ரோல் மாடல் சச்சின் சேவாக்லாம் இல்லை என கூறி வேறொரு முன்னாள் வீரரை கூறி ஆச்சரியப் படுத்தினார்.
இது குறித்து படிக்கல் பேசுகையில், "இந்திய கிரிக்கெட் அணிக்காக ஓப்பனிங் விளையாடிய கவுதம் கம்பீர்தான் எனது ரோல் மாடல். அணி பிரஷரில் இருக்கும்போது அவரது ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதனால் தான் அவரை பிடிக்கும். இந்த சீசனில் என்னால் நிச்சயமாக ரன்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் விளையாடினேன்" என்றார்.
