Kathir News
Begin typing your search above and press return to search.

நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடத்தில் நடராஜன் விளையாட வாய்ப்பு!

நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடத்தில் நடராஜன் விளையாட வாய்ப்பு!

நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடத்தில் நடராஜன் விளையாட வாய்ப்பு!

Pravin kumarBy : Pravin kumar

  |  13 Jan 2021 1:54 PM GMT

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவிந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், விஹாரி, பும்ரா ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்துள்ளனர்.

இந்திய வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும் என்பதால் இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இந்திய அணி யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறது.தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகவுள்ளார்.

இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு பதிலாக தமிழக வீரரான தங்கராசு நடராஜன் அணியில் இடம் பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றார். தற்போது 4வது போட்டியில் மீண்டும் நடராஜன் அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News