Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய விளையாட்டு போட்டி - தமிழக பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

தேசிய விளையாட்டு தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை.

தேசிய விளையாட்டு போட்டி - தமிழக பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Oct 2022 5:15 AM GMT

36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், ராஜ்கோட், பவ நகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகின்றது. போட்டியில் நான்காவது நாளான நேற்று தடகளத்தில் கடந்த பெண்களுக்கான நாளின் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தை தமிழகத்தை சேர்ந்த திவ்யா, வித்யா ராமராஜ், ஒலிம்பிக் ஸ்டிபி சுபா ஆகியோர் அடங்கிய தமிழக அணியினர் மூன்று நிமிடம் 35.32 வினாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி உள்ளார்கள்.


இந்த போட்டியில் 2015 ஆம் ஆண்டு கேரளா குழுவினர் மூன்று நிமிடம் 35.34 வினாடிகளில் இலக்கு எட்டியதை முந்தைய சாதனையாக இருந்தது. அதை தமிழகம் தற்போது முறியடித்து உள்ளது. அரியானா அணியினர் இரண்டாம் இடத்தையும், கர்நாடகா வீராங்கனைகள் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதன் ஆண்கள் பிரிவில் தமிழகத்திற்கு வெண்கலம் கிடைத்தது.


ரோலர் ஸ்கேட்டிங்கள் அணியில் பிரிவின் ஆர்த்தி, கார்த்திகா, கோபிகா ஆகியோர் அடங்கிய தமிழக பெண்கள் அணியினர் புது இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வசப்படுத்தினார்கள் இதன் ஆண்கள் பிரிவில் தமிழகத்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. தொடர் ஓட்டத்தில் தமிழக பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை முறியடித்து இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News