உயரிய விருதான பத்மஸ்ரீயை பெற்றார் நீரஜ் சோப்ரா!
By : Thangavelu
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அதிலும் இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. அதன்படி 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாம் கட்டமாக நேற்று (மார்ச் 28) நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அதில் ஜப்பான் நாட்டில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter