Kathir News
Begin typing your search above and press return to search.

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா திடீர் விலகல்!

காமன்வெல்த் போட்டியில் இருந்து நீரஜ் சோப்ரா திடீர் விலகல்!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2022 11:05 AM GMT

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடைபெறுகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகினார்.

மேலும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா கடந்த 24ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியனஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதற்கிடையில் உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் அடைந்ததால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாது என்று நீரஜ் சோப்ரா கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News