இந்தியா – ஆஸ்திரேலியா தொடரை பிரமாண்டமாக மாற்ற புதிய திட்டம்.!
இந்தியா – ஆஸ்திரேலியா தொடரை பிரமாண்டமாக மாற்ற புதிய திட்டம்.!

By : Pravin kumar
ஐபிஎல் 2020 தொடர் சிறப்பான முறையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கெற்ற அனைத்து வீரர்களும் நாடு திரும்பிய நிலையில் இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா தொடருக்காக ஐபிஎல் இறுதி போட்டி முடிவடைந்த அடுத்த நாளை ஆஸ்திரேலியா பறந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி-20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அதற்கு முன்தாக அனைத்து வீரர்களும் 14 தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்தியா அணிக்கு எதிரான தொடரை பிரமாண்டமாக மாற்று புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஒரு நாள் மற்றும் டி -20 தொடர்களில் 25% ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்கு அந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கொரோனா தொற்றிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் தொடர்களும் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் இந்த முயற்சியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு உள்ளது. டெஸ்ட் தொடரில் 25% இருந்து 50% உயர்த்த முடிவு செய்ததுள்ளது.
