வெஸ்ட் இண்டிஸ் அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து அணி.!
வெஸ்ட் இண்டிஸ் அணி 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து அணி.!

By : Pravin kumar
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டிஸ் அணி மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி ஏற்கனவே வென்ற நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனின் அதிரடி இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி எளிதில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் 519 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் பாலோ ஆன் செய்த நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்னில் ஆல் அவுட் செய்து 137 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த நியூசிலாந்து அணி நிக்கோலஸ் ஹென்றியின் சதத்தால் 460 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் அணியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் திணற 131 ரன்களுக்கு சுருண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் சற்று நிலைத்து விளையாடிய செப்பெல் மற்றும் டி சில்வா ஆட்டத்தால் 317 ரன்கள் சேர்த்த நிலையில் நியூசிலாந்து அணியின் வாக்னெர் மற்றும் டிம் சவுதி மற்றும் ஜமிசன் பந்து வீச்சில் சிதறியது வெஸ்ட் இண்டிஸ். நியூசிலாந்து அணி 12 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. தொடர் நாயகனாக ஜிமிசன் தேர்வு செய்யப்பட்டார்.
